[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

 “மாற்றங்களை நம்மிடமிருந்து தொடங்க வேண்டும்” - கமல்ஹாசன் வேண்டுகோள்

kamalhassan-request-for-banner-issue

தனக்கு பேனர், கொடிகள் வைக்க வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பரமக்குடியில் கமல்ஹாசனின் தந்தை சீனிவாசன் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது. இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். இந்நிலையில், விழாவிற்காக வரும் தனக்கு பேனர், கொடிகள் வைக்க வேண்டாம் என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மேலும், “பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய வகையில் பேனர், கொடிகள் வைப்பதை தவிர்க்க வேண்டும். எவ்வித காரணங்களும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. சமரசங்கள் செய்து கொள்ளப்பட மாட்டாது. நிகழவிருக்கும் அரசியல் ஆட்சி முறையில் மக்கள் நீதி மய்யம் கொண்டு வரவுள்ள மாற்றங்களை நம்மிடமிருந்து தொடங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close