புதுச்சேரி அதிமுக மாநில செயலாரும், மணவெளி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான புருஷோத்தமன் விஷவண்டு தாக்கி உயிரிழந்தார்.
புதுச்சேரி அரியாங்குப்பம் மணவெளி பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளராக இருந்து வந்தார். மேலும் மணவெளி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், இவர் விழுப்புரம் மாவட்டம் ராதாபுரம் பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்துக்கு சென்றபோது அவரை விஷவண்டு கடித்ததாக தெரிகிறது. இதையடுத்து மயங்கி விழந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
“குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” - 5 மாநில அரசுகள் போர்க்கொடி
50 நாட்களை நிறைவு செய்த ‘பிகில்’, ’கைதி’ - ரசிகர்களுக்கு இயக்குநர் நன்றி
சாய்ந்த 50 ஆண்டுகள் பழமையான மரம் - மீண்டும் அழகாக நட்டு வைத்த அதிகாரிகள்
பாலியல் வன்கொடுமைக்கு 21 நாட்களுக்குள் தூக்கு - ஆந்திர பேரவையில் நிறைவேறியது திஷா மசோதா
அசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ஒத்திவைப்பு?