ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்துள்ள தொப்பபாளையத்தில் ஒரு சமூகத்தினரின் சாமி சிலைகள் உடைக்கப்பட்டதை கண்டித்து, மறியல் போராட்டம் நடைபெற்றது.
சிவகிரியை அடுத்துள்ள தொப்பபாளையத்தில் ஒரு சமூகத்தினரின் குலதெய்வக் கோயிலாக காளியண்ணன் கோயில் உள்ளது. இதன் முன்பகுதியில் 8 அடி உயரம் கொண்ட இரண்டு குலதெய்வ சாமி சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு கோயிலுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், இரண்டு சாமி சிலைகளை உடைத்து விட்டு செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது.
அத்துடன் அவர்கள் அங்கு உள்ள சேமிப்பு பெட்டியையும் உடைத்துச் சென்றுள்ளனர். சாமி சிலைகள் உடைக்கப்பட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திகணேசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வருவாய் அலுவலர் கவிதா, ஆர்டிஓ முருகேசன் ஆகியோரும் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தை கண்டித்து சிவகிரியில் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்காச்சோளக்காட்டில் சடலமாக கிடந்த பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது
பூம்புகார் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு
கந்துவட்டிக்காக தொழிலாளி வீட்டை இடித்த கும்பல் : 3 பேர் கைது
அழகான இரு வெங்காயத் தோடுகள் - மனைவிக்கு அக்ஷய் குமார் தந்த விநோத பரிசு
படிக்கட்டில் தடுக்கி விழுந்த ‘பிரதமர் மோடி’ - காயம் எதுவுமில்லை என தகவல்