[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தோனேசியாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம். 7.4 ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
  • BREAKING-NEWS கும்பகோணத்தில்‌ பாதாளச்சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தால் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு - ஏற்பாடுகள் தீவிரம் 

nanguneri-by-election-will-be-start-tomorrow

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்த எச்.வசந்தகுமார், நாடாளுமன்ற உறுப்பினரானதாலும், விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல்நலக்குறைவால் மரணமடைந்ததாலும், இவ்விரு சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் நாராயணன், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜ நாராயணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். விக்கிரவாண்டியில் அதிமுக சார்பில் முத்தமிழ் செல்வனும், திமுக சார்பில் புகழேந்தியும், நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமியும் களம் கண்டுள்ளனர்.

இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்காக நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச்சாவடிகளும், விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தமிழக காவல்துறையினருடன் சேர்ந்து, துணை ராணுவப்படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 3 தொகுதிகளிலும் நாளை தேர்தல் நடத்தப்பட்டு, வருகிற 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close