[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

‘அதிகாரிகளின் அலட்சியத்தால் டெங்கு பாதித்த சிறுமி உயிரிழப்பு’ - கிராம மக்கள் புகார்

four-year-girl-who-affected-with-dengue-died-near-omalur

ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி ஒன்றியத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்கு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். 

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் குண்டக்கல் கிராம ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள ஜோடுகுளி கிராமம் எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிப்பவர் செந்தில் ராஜேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில், இரண்டாவது குழந்தை கனிஷ்காவுக்கு(4) கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தையை காடையாம்பட்டி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை எதுவும் செய்யாமல் மாத்திரையைக் கொடுத்து அனுப்பியுள்ளனர். 

தொடர்ந்து தொப்பூர் மற்றும் மேச்சேரி அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் சிகிச்சை எடுத்துள்ளனர். ஆனால், அவர்கள் சிறுமிக்கு ரத்தப் பரிசோதனை செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அதனையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு ரத்தப் பரிசோதனை செய்ததில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. 

                

இதையடுத்து குழந்தையை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து நான்கு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் நான்கு வயது சிறுமி கனிஷ்கா மருத்துவமனையிலேயே பரிதாமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமி இறந்ததால் அவரது பெற்றோர்களும், உறவினர்களும் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். 

                      

குண்டக்கல் கிராம பகுதியில் ஒரு குழந்தை இறந்துள்ள நிலையில், மேலும், பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தை இறந்த நிலையிலும் மருத்துவக் குழுவினரோ, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளோ கிராமத்தில் எந்தவித சுகாதாரப் பணிகளையும் செய்யவில்லை என்றும் மருத்துவ முகமும் நடத்தவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close