[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி
  • BREAKING-NEWS இடஒதுக்கீடு விவரங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை நாடாளுமன்ற நடப்பு கூட்டத்தொடரில் பிரதமர் தாக்கல் செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நெல்லையில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டத்தை உருவாக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி
  • BREAKING-NEWS தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கழுத்தை பிடித்து இழுத்துச்சென்ற காவலர்கள்

protest-family-attacked-by-palani-police-for-protest-in-front-of-police-station

பழனி காவல் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை துணை கண்காணிப்பாளர் கழுத்தைப் பிடித்து இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த வி.கே. மில்ஸ் பகுதியில் 2 நாட்‌களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் சென்ற சங்கர் என்பவருக்கும், வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்‌பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக காவலர் வேந்தன் சங்கரை தாக்கியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் சங்கரின் பெற்றோர் பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க வந்துள்ளனர். 

அப்போது புகாரை வாங்க காவல்துறையினர் மறுப்பதாக கூறி சங்கரின் பெற்றோர் மற்றும் உறவினர்‌கள் காவல்நிலையம் முன்‌ போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கழுத்தைப் பிடித்து இழுத்து சென்றார். இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close