ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவது போல் முதியவர்களை ஏமாற்றி நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை ராமநாதபுரம் காவல்துறையினர் கைது செய்தனர்.
காரைக்குடியைச் சேர்ந்த கோபி என்பவர் பணம் எடுக்க வரும் முதியவர்களுக்கு உதவுவது போல ஏடிஎம் கார்டுகளை பெற்றுக் கொண்டு அதற்கு பதிலாக போலி ஏடிஎம் கார்டை கொடுத்து, பணத் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் கடந்த ஆறு மாதங்களாக, திருச்சி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஏடிஎம் மையங்களுக்கு வரும் வாடிக்கையாளரிடம் கைவரிசை காட்டியுள்ளார்.
இந்நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க வந்த கோபியை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
“குடியுரிமை சட்டத் திருத்தம் மக்களுக்கு செய்யும் துரோகம்”- கமல்ஹாசன் சாடல்
'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்' - புரட்சிக்கவி பாரதியின் பிறந்ததினம் இன்று..!
மாநிலங்களவையில் இன்று தாக்கலாகிறது குடியுரிமை திருத்த மசோதா
இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-48
உள்ளாட்சி தேர்தல் வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை