[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

பல மாநிலங்களில் கைவரிசை - யார் இந்த நகைகடை கொள்ளையன் முருகன்?

trichy-robbery-case-who-is-this-murugan

திருச்சி கொள்ளை சம்பவம் தொடர்பாக கும்பல் தலைவன் முருகன் உள்பட 7 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இதில் முருகன் ஏற்கெனவே பல மாநிலங்களில் தனது கைவரிசையை காட்டியது தெரியவந்துள்ளது.

திருச்சி நகை கடையில் பின்பக்க சுவரை துளையிட்டு, 28 கிலோ எடையுள்ள தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. திருச்சியை சுற்றியுள்ள பெரம்பலூர்‌, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தேடுதல்‌ வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. பிரதான சாலைகளில் கிடுக்கிப்பிடி சோதனை நடைபெற்றது. இதற்கு கைமேல் பலன் கிடைத்தது.

(கைது செய்யப்பட்ட மணிகண்டன்)

நேற்று இரவு சுமார் எட்டரை மணியளவில் முதல் பெரிய திருப்பம் கிடைத்தது. திருவாரூரில் விளமல் என்ற இடத்தில்‌ காவல்துறையினர் வாகன சோதனையில்‌ ஈடுபட்டபோது, அந்த வழியே பைக்கில் வந்த இருவர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டியுள்ளனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்ற காவல்துறையினர், மடப்புரம்‌ கமலாம்பாள் நகரில் அவர்களை மடக்கினர். அப்போது வாகனத்தில் பின்னால் இருந்த சுரேஷ் என்பவன் தப்பியோடிவிட்டான். வாகனத்தை ஓட்டிய மணிகண்டன் மட்டும் மாட்டிக்கொண்டான்.

மணிகண்டன் வைத்திருந்‌த பெட்டியில் 5 கிலோ தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றில் இருந்த பார் கோடு சீட்டுகளை சோதித்ததில் அவை திருச்சி நகைகடையிலிருந்து திருடப்பட்டவை என்பது உறுதியானது. மணிகண்‌டனுடன் சேர்ந்து சென்றபோது, தப்பியோடிய சுரேஷ், இந்தியா முழுவதும் வங்கிகள், ஏடிஎம் மையங்களில் நடத்தப்பட்ட பல்வேறு கொள்ளைகளில் தொடர்புடைய திருவாரூரைச் சேர்ந்த முருகன் என்பவனின் உறவினர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

(மணிகண்டனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள்)

இதனால் கொள்ளைக் கும்பலின் தலைவனான திருவாரூர் முருகன் ‌மற்றும் அவரது கூட்டாளிகளான சுரேஷ், கோபால், காளிதாஸ், தினகரன், லோகநாதன் மற்றும் ரகு ஆகியோரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. கைதான மணிகண்டனிடம் இருந்து 5 கிலோ நகைகள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய நகைகள் தப்பியோடிய 7 பேரிடம் இருக்கும் என்பதால் அவர்களை கைது செய்து அவற்றை மீட்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

(தப்பி ஓடிய சுரேஷ்)

இதனிடையே முருகன் குறித்த பல அதிர்ச்சிகரத் தகவல்களும் வெளியாகி உள்ளன. தமிழகம் மட்டுமில்லாமல் ஏற்கெனவே கர்நாடகா, உள்ளிட்ட பல மாநிலங்களில் கொள்ளைச் சம்பவத்தை அவர் அரங்கேற்றி இருப்பதும் தெரியவந்துள்ளது. பல கொள்ளைச் சம்பவங்களில் முருகன் ஈடுபட்டிருந்தாலும் அவரைப் பிடிக்க போலீசார் திணறவே செய்திருக்கின்றனர்.

கிட்டத்தட்ட 50 வழக்குகளுக்கும் அதிகமாக குற்றம்சம்பவங்களில் தொடர்புடைய முருகனை ஒருமுறை போலீசார் கைது செய்திருக்கின்றனர். ஆனால் சில மாதங்களில் ஜாமீன் பெற்ற அவர் மீண்டும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அவரைத் தற்போது தமிழக தனிப்படை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close