[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலில், இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச முன்னிலை

இடைத்தேர்தல் : விஜயகாந்தை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய அமைச்சர்கள்

ministers-meet-vijayakanth

தமிழக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து இடைத்தேர்தலில் ஆதரவு கோரினர். 

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளில் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து இந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி விக்கிரவாண்டியில் எம்.முத்தமிழ்ச்செல்வன், நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் ஆகியோர் போட்டியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து இடைத்தேர்தலில் ஆதரவு கோரினர். இந்த சந்திப்பின்போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா, அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் விஜயகாந்தை தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close