[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலில், இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச முன்னிலை

பீரோவை உடைக்காமல் நகை, பணம் கொள்ளை - தொழிலதிபர் வீட்டில் கைவரிசை 

jewelry-theft-in-business-man-home-in-covai

கோவையில் தொழிலதிபர் வீட்டில் 10 லட்சம் மதிப்பிலான தங்கம், வைர நகைகள் மற்றும் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தைச் சேரந்தவரான ஆதித்யா குப்தா தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் கோவை சாய்பாபா காலணி பகுதியில் வசித்து வருகிறார். ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர் தனது மனைவியுடன் கடந்த 16-ம் தேதி சொந்த ஊரான குஜராத்திற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் அவரது இரு குழந்தைகள் மற்றும் பணியாட்கள் எட்டு பேர் மட்டுமே இருந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த 19-ம் தேதி அவரது வீட்டின் அருகிலுள்ள மற்றொரு வீட்டில் அலாரம் சத்தம் கேட்டதாகவும் ஆனால் எதுவும் திருடப்படவில்லை எனவும் அக்கம்பக்கத்தினர் ஆதித்யா குப்தாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வீடு திரும்பிய ஆதித்யா குப்தா தனது வீட்டில் சோதனையிட்டபோது பீராவிலிருந்த வைர மோதிரம், ஒரு தங்க செயின், 2.5 லட்சம் ரொக்கம் மற்றும் வெளிநாடு பணம் 1000 என பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. 

இது குறித்து சாய்பாபா காலணி காவல் நிலையத்திற்கு தகவலளித்தன் அடிப்பட்டையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகள் பதிவான டி.வி.ஆர் ஐயும் எடுத்துச் சென்றதால் போலீசார் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளதோடு, பீரோ உடைக்கப்படமால் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதால் வீட்டிலிருந்த எட்டு பணியாளர்களையும் தனித்தனியே விசாரத்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close