[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

ஜோசியரை நம்பி 450 மாடுகள் வாங்கிய மெஸ் உரிமையாளர் - கடன் தொல்லையால் தலைமறைவு?

madurai-hotel-owner-missing-with-his-family

மதுரையில் தன்னிடம் வேலை பார்த்து வரும் 120 ஊழியர்களின் பெயரில் தலா 2 லட்சம் ரூபாய் வங்கிக்கடன் பெற்ற மெஸ் உரிமையாளர் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

மதுரையில் உள்ள பிரபலமான உணவகங்களில் ரமணா மெஸ்ஸும் ஒன்று. 3 கிளைகளைக் கொண்ட இதன் உரிமையாளர் செந்தில் திடீரென தனது குடும்பத்துடன் மாயமாகிவிட்டார். அவர் கந்துவட்டி கும்பலால் கடத்தப்பட்டுவிட்டதாக தகவல் பரவியது. கோபாலகிருஷ்ணன் என்பவர் அ‌வரை கடத்திவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இதுகுறித்து கோபாலகிருஷ்ணனிடம் கேட்ட போது பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. ரமணா மெஸ் உரிமையாளர் செந்திலுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இருந்ததாக தெரிகிறது. 

மாடுகளை அதிகளவில் வாங்கி வளர்த்தால் செல்வம் கொழிக்கும் என ஜோதிடர் ஒருவர் செந்திலிடம் கூறியதாக சொல்லபடுகிறது. அதன் பேரில் 450 மாடுகளை வாங்கி செந்தில் பண்ணை வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் பெருமளவில் இழப்பு ஏற்பட்டு கடன் பிரச்னையில் சிக்கியதாக சொல்லப்படுகிறது. அதனை சமாளிக்க கோபாலகிருஷ்ணனிடம் 5 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு அவரை மெஸ்ஸில் பங்குதாரராக சேர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் பேசியபடி கடனை அடைக்காமல் தான் கொடுத்த 5 கோடி ரூபாயுடன் செந்தில் தலைமறைவாகி விட்டதாக கோபாலகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுஒருபுறமிருக்க செந்தில் தம்மிடம் பணியாற்றிய 120 ஊழியர்களின் பெயரில் தலா 2 லட்சம் ரூபாய் வங்கிக்கடன் பெற்றிருப்பதாக தெரிகிறது. அதனை திருப்பிச் செலுத்தாமல் அவர் தலைமறைவாகிவிட்டதாக ரமணா மெஸ் ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close