[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சிறுவன் உயிரிழப்பு : மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 

tamilnadu-human-rights-commission-notice-to-chennai-corporation

சென்னையில் சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரத்தில் மாநகராட்சி ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை முகலிவாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற 14 வயது தினா என்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான். இந்நிலையில், மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது. 

அதன்படி சென்னை மாநகராட்சி ஆணயர், மின்னுற்பத்தி பகிர்மான கழகத்தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், “தோண்டப்பட்ட குழி முழுமையாக மூடாதது மனித உரிமை மீறல் ஆகாதா? பணியில் அலட்சியமாக இருந்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுவனை இழந்த குடும்பத்திற்கு என்ன நிதியுதவி வழங்கப்பட்டது” என பல கேள்விகளை முன் வைத்துள்ளது. 

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணயர் மற்றும் மின்னுற்பத்தி பகிர்மான கழகத்தலைவர் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் எனவும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close