[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

“கேரளாவில் தடை என திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது”- ஆச்சி மசாலா நிறுவனம் விளக்கம்..!

aachi-masala-explanation-about-rumors

ஆச்சி மிளகாய் பொடிக்கு கேரளாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாக ஆச்சி மசாலா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பூச்சிக்கொல்லி மருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தை சேர்ந்த ஆச்சி மசாலா நிறுவனத்தின் மிளகாய் பொடிக்கு கேரளாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவியது. இந்நிலையில் ஆச்சி மிளகாய் பொடிக்கு கேரளாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாக ஆச்சி மசாலா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரளாவில் ஆச்சி மிளகாய் பொடிக்கு தடை எனக் கூறுவது முற்றிலும் தவறான செய்தி என  குறிப்பிடப்பட்டுள்ளது. ஆச்சி மசாலாவின் ஒவ்வொரு தயாரிப்பும், ஒவ்வொரு கட்டத்திலும் பல தரப்பு சோதனைகளுக்கு பிறகு தரத்தை உறுதி செய்தே விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எந்த இடத்திலும், எந்தவித தரக்கட்டுப்பாடு சோதனைக்கும் ஆச்சி மசாலா தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆச்சியில் தரம் என்பது எப்போதும் நிரந்தரம் என்றும் அதில் சமரசத்திற்கு இடமில்லை என்றும் உறுதியாக கூறப்பட்டுள்ளது. ஆச்சி மசாலாவை கேரளாவில் உபயோகிக்க தடையில்லை என கேரளா food authority நிறுவனம் தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது. தவறான வதந்திகளை நம்பாமல் ஆச்சி மசாலா தயாரிப்புகளுக்கு வழக்கம்போல வரவேற்பை அளிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close