[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

"ரஜினி மீதான விமர்சனங்கள் நாகரிகமற்றது" ஹெச்.ராஜா

h-raja-about-criticism-on-rajinikanth

ரஜினி மிகப்பெரிய ஆளுமை; அவர் குறித்த விமர்சனங்கள் நாகரிகமற்றது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி அமைப்பின் சார்பில் விநாயகர் விசர்ஜன ஊர்வல துவக்க விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்றார்.  அப்போது பேசிய அவர், “ தமிழகம் எப்போதுமே ஆன்மிக பூமிதான்; நாத்திகவாதிகளுக்கு இடமில்லை என்று நிரூபித்துள்ளார் அத்திவரதர். சுதந்திர போராட்ட காலத்தில் ஆன்மிகத்தை ஊடகமாக பயன்படுத்தி தேசபக்தி வளர்க்கப்பட்டது. தற்போது அது தேவைப்படுகிறது.

பியூஷ் மனுஷ் ஒரு அர்பன் நக்சல். அவர் மீது ஏற்கெனவே 18 வழக்குகள் உள்ளன. எனவே பியூஷ் மனுஷை குண்டர் சட்டத்தில் காவல்துறை கைது செய்ய வேண்டும். இந்தியாவிற்கு காங்கிரஸ் செய்த துரோகத்தின் பலனாக ப.சிதம்பரம் சிபிஐ காவலில் உள்ளார். தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஒருவரின் நிலையும் இதேபோல் ஆகும்.

ரஜினிகாந்த் அரசியல் குறித்த தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. அவர் மிகப்பெரிய ஆளுமை; அவர் குறித்த விமர்சனங்கள் நாகரிகமற்றது” என தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close