[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

350 கிலோ மீட்டர் சிட்டு போல பறந்த ஆம்புலன்ஸ் - தமுமுகவின் தரமான ப்ளான்

youth-help-ambulance-to-go-fast-without-obstacles

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் உயிரைக் காப்பாற்ற இளைஞர்கள் சிலர், 6 மாவட்டங்களை 4 மணி நேரத்தில் கடந்து புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதற்காக வாட்ஸ் அப்பை வாக்கி டாக்கி போல பயன்படுத்தி துரிதமா‌க செயல்பட்ட இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் புற்றுநோய் தாக்கத்தால் முதுகு தண்டுவடம் செயலிழக்கும் நிலைக்கு செல்வதாகவும் 8 மணி நேரத்திற்குள் சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியதால் சிறுவனின் உறவினர்கள் தமுமுக அமைப்பிடம் உதவிக் கேட்டுள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டது. விரைந்து செல்ல வேண்டும் என்பதற்காக தமுமுக அமைப்பினர் ராமநாதபுரம், புதுச்சேரி இடையே உள்ள அனைத்து ஊர்களிலும் உள்ள தமுமுக அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பான தகவல்களை வாட்ஸ் அப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டனர்.

தகவலைப் பார்த்த அனைவரும் அந்தந்த ஊர்களில் காவல்துறையை அணுகி உதவி கோரினர். சில சாலைகளில் பல்வேறு அமைப்புகளின் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ் எந்தப் பகுதியை கடக்கிறது என்ற தகவலை காவல் துறை வாக்கி டாக்கி மூலம் தெரிவிப்பது போன்று வாட்ஸ் அப் மூலம் தகவல் பகிர்ந்து ஆம்புலன்ஸ் வரும் பாதையை காவல் துறையின் உதவியுடன் போக்குவரத்தை கண்காணித்து ஆம்புலன்ஸ் செல்ல வழி அமைத்துக் கொடுத்தனர்.

சிறுவனை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ், எந்தத் தடையும் இல்லாமல், எங்கும் நிற்காமல், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர் வழியாக 350 கிலோ மீட்டர் தூரமுள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு 4.15 மணி நேரத்தில் வந்து சேர்ந்தது. ஆம்புலன்சை வேகமாக ஓட்டி வந்த தமுமுக அமைப்பின் ஓட்டுநர் ஜாஸ் மற்றும் ஆம்புலன்ஸ் செல்ல உதவிய இளைஞர்களுக்கு பாராட்டு‌க்கள் குவிந்து வருகின்றன. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close