[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

‘ஐடி ஊழியரை மிரட்டி ஆபாசமாக படம் எடுத்த கும்பல்’ - மூவர் கைது

3-arrested-for-allegedly-filming-pornography-and-extorted-money

சென்னையில் ஐ.டி ஊழியர் ஒருவரை ஆபாசமாக படமெடுத்து பணம் பறித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. நிர்வாண படத்தை இணையத்தில் வெளியிடப்போவதாக மிரட்டி பணம் பறித்த கும்பல் சிக்கியது எப்படி?

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த இளைஞர், தாம்பரத்தில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 30ஆம் தேதி வெளியே செல்வதற்காக செயலி மூலமாக, இருசக்கர வாகனத்தை புக் செய்துவிட்டு காத்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அங்கு காரில் வந்த நபர், தான் செயலி நிறுவனத்தின் ஓட்டுநர் எனக்கூறியுள்ளார். 

பயணத்திற்காக இருசக்கர வாகனத்தை புக் செய்திருந்த நிலையில், கார் வந்திருப்பதும், அதில்‌ ஏற்கனவே இருவர் அமர்ந்திருந்ததும், இளைஞருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. மழை பெய்து வருவதால், இருசக்கர வாகனத்திற்குப் பதில், காரில் பிக்-அப் செய்து கொள்வதாக ஓட்டுனராக வந்த நபர் விளக்கமளித்துள்ளார். அதை நம்பிய இளைஞர் காருக்குள் ஏறியதும், சிட்டாய் பறந்த வாகனம், கிண்டி தொழிற்பேட்டை பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

ஏதோ தவறாக நடப்பதை அறிந்த அந்த இளைஞர், கார் ஓட்டுநரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். திடீரென ஆவேசமான மூவரும், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாக்கி மிரட்டத் தொடங்கியதாக தெரிகிறது. அப்போது தான், தன்னை பிக்-அப் செய்தவர் பைக் ஓட்டுநர் அல்ல, கடத்தல்காரர்கள் என்பது அவருக்கு தெரியவந்துள்ளது. 

அவசர அவசரமாக இளைஞரின் ஆடைகளை உருவிக் கொண்ட மூவரும், அவரை முழு நிர்வாணமாக்கியுள்ளனர். நிராயுதபாணியாக இருந்த இளைஞரின் நிர்வாண கோலத்தை கத்தி முனையில் செல்ஃபோனின் பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து 11 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்ட அந்தக் கும்பல், அத்தோடு விட்டுவிடவில்லை. ''நாளைக்கு வருவோம், 50 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும், இல்லன்னா இந்த ஃபோட்டோவை இண்டெர்நெட்ல வெளியிட்டுவிடுவோம்'' என மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக அந்த இளைஞர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவ நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி ஆய்வு செய்யப்பட்டன. அந்த காரின் பதிவெண்ணை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சரவணன், மணிகண்டன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

அதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சரவணன், ராபிடோ நிறுவனத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதுபோன்ற APP-கள் மூலம் வாகனங்களை புக் செய்யும் ஆண்களைக் குறிவைக்கும் இந்தக் கும்பல், அவர்களை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி வந்ததா என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close