[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு - ஜல் சக்தி துறை அமைச்சகம்

mettur-dam-is-likely-to-reach-full-capacity

சேலம் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவையும் எட்ட வாய்ப்புள்ளதாகவும், நீர் இருப்பை தொடர்ந்து கண்காணித்து வெளியேற்றவும் ஜல் சக்தி துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடகாவில் மழைப்பொழிவு சற்றே குறைந்துள்ள நிலையில் கபினி, ஹராங்கி, ஹேமாவதி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்துள்ளது. இருப்பினும் சராசரியாக 10 முதல் 30 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்தாலும் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கும் என ஜல் சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும் மேட்டூர் அணை முழு கொள்ளளவையும் எட்டும் என்பதால், அணையின் நீர் இருப்பைக் கண்காணித்து நீரை வெளியேற்ற வேண்டும் என ஜல்சக்தி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 30ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close