[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

மாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

court-order-to-college-to-give-rs-20-lakhs-to-student

மாற்றுச் சான்றிதழில் நன்னடத்தை திருப்திகரமாக இல்லை என குறிப்பிட்டதால், பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவருக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கல்லூரி நிர்வாகத்திற்கு மாநில நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்த பாலசுந்தர்ராஜ் என்பவர், குடும்ப காரணங்களுக்காக வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெறுவதற்காக சான்றிதழ்களை வழங்கும்படி, கல்லூரி நிர்வாகத்திடம் கோரியிருந்தார். ஆனால் கட்டண பாக்கி இருப்பதாகக் கூறி, கல்லூரி நிர்வாகம் சான்றிதழ்களை வழங்க மறுத்தது.

இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கட்டண பாக்கி 75 ஆயிரம் ரூபாயை செலுத்தி சான்றிதழ்களைப் பெற்றார், பாலசுந்தர்ராஜ். ஆனால், மாற்று சான்றிதழில் நன்னடத்தை திருப்திகரமாக இல்லை எனக் கூறியுள்ளதால் தன் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கல்லூரிக்கு உத்தரவிடக் கோரி சென்னையில் உள்ள மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.தமிழ்வாணன், உறுப்பினர்கள் பாஸ்கரன், லதா மகேஸ்வரி  அடங்கிய அமர்வு, உள்நோக்கத்தோடு மனுதாரரின் நன்னடத்தை திருப்திகரமாக இல்லை என்று கல்லூரி நிர்வாகம் சான்றிதழில் குறிப்பிட்டது கண்டிக்கத்தக்கது எனக் கூறி, இழப்பீடாக 20 லட்சம் ரூபாயை மனுதாரருக்கு வழங்க கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close