[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

‘வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும்’ - முதல்வர் பழனிசாமி

vellore-district-will-be-divided-into-three-says-cm-palanisamy

திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தலைமையிடங்களாகக் கொண்டு வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை சென்னை கோட்டைக்கு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போலீசாரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் காலை 9 மணிக்கு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திரதின விழா உரையாற்றினார். அப்போது பேசிய முதலமைச்சர் வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது. 2 புதிய மாவட்டங்கள் சேர்க்கப்படுவதால் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆக உயர்கிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close