[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

கனமழை எதிரொலி : வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி 

rain-water-entry-in-home-valparai-people-sad

வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதிகளுக்குள்ளாகியுள்ளனர். 

கோவை மாவட்டம்  வால்பாறையில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது, இதனால் கூழங்கல் ஆறு மற்றும் வாழைத்தோட்டம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, வாழைத்தோட்டம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் கரையோரம் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர், 

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது, நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக ஒரே நாளில் 15 அடி நீர்மட்டம் அதிகரித்து நேற்று 91அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 106 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 613 கன அடி நீர் வந்து கொண்டிருந்தாலும் 542 அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

மேலும் கனமழை காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் குரங்கு நீர்வீழ்ச்சியில் இரண்டாவது நாளாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close