[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

வரதட்சணை கொடுமையால் தீக்குளித்து உயிருக்கு போராடிய இளம்பெண் உயிரிழப்பு 

woman-dies-after-dowry-death

திருவாரூரில் வரதட்சணை கொடுமையால் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளம் பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

திருவாரூர் அருகே மருதப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த அருணுக்கும், மைதிலிக்கும் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அப்போதுமுதல் மைதிலியை வரதட்சணை கேட்டு கணவர் அருண், மாமனார் இளங்கோ, மாமியார் சுபா ஆகியோர் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

மைதிலி கடந்த மாதம் ஜூலை 26 ஆம் தேதி அதிகாலை, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில்  மைதிலி போராடி வந்தார். 

இதனிடையே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார். அதனடிப்படையில் கணவர் அருண், மாமனார் இளங்கோ ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மைதிலி உயிரிழந்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close