[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

சாலையில் தாறுமாறாக ஓடிய கார் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி 

road-accident-in-namakkal

நாமக்கல் மாவட்டத்தில் தாறுமாறாக ஓடிய கார், சாலையில் நடந்து சென்றவர்களை தூக்கி வீசிவிட்டு கடந்து சென்ற பதைபதைப்பான காட்சிகள் வெளியாகியுள்ளன.

திருச்செங்கோடு கிழக்கு ரதவீதியில் நேற்று மாலை தேர் நிலைக்கு அருகே சாலையில் கார் ஒன்று அதிவேகமாக சென்றது. திடீரென இடதுபுறம் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், நடந்து சென்றவர்கள் என அனைவரின் மீதும், மோதித் தள்ளிவிட்டு, கடந்து சென்றது. பதைபதைப்பான இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன.

சம்பவத்தில் தொண்டிகரட்டைச் சேர்ந்த மனோகரன் என்ற முதியவர் உள்ளிட்ட 17 பேர் காயமடைந்தனர். பத்துக்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. காயமுற்றவர்கள் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விசாரணை நடத்திய நகர காவல்துறையினர், காரை ஓட்டி வந்‌த தனியார் கல்லூரி பேராசியர் விவேகானந்தனை கைது செய்தனர். காரின் முன்பக்க டயர் வெடித்து நிலைதடுமாறி விபத்து நேரிட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close