[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலில், இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச முன்னிலை

“அரசு நீட் பயிற்சி மையத்தில் படித்த இருவருக்கு மருத்துவ இடம்” : செங்கோட்டையன் 

sengottaiyan-said-about-govt-neet-center

அரசு நீட் பயிற்சி மையத்தில் படித்த இருவருக்கு மருத்துவ இடம் கிடைத்துள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “செப்டம்பர் மாதம் இறுதிக்குள் புதிய பாடத்திட்டத்தை கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு முழுமையாக நிறைவேற்றப்படும். 2100 பள்ளிகளுக்கு ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. 11, 12 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு  மட்டும்தான் மடிக்கணினி வழங்குகிறோம். அதேபோல் 8 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்(tab) வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.  

அரசு மருத்துவ கல்லூரியில் அரசு மாணவர்கள் ஒருவர் கூட தேர்வு இல்லை என்ற கேள்விக்கு “போன ஆண்டு மாணவர்கள்  நம்பிக்கை இல்லாமல் இருந்தனர். இந்த ஆண்டு நம்பிக்கையோடு மாணவர்கள் படித்து வருகின்றனர்.  48.3 8% தேர்வில் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்த ஆண்டுக்கு தங்களை தயார் செய்து வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதே இதனைப் படிக்க வேண்டியிருக்கிறது. வகுப்புகளுக்கும் வரவேண்டியிருக்கிறது. ஆனால் தனியார் பள்ளிகளில் வகுப்பறைகளை வராமல் பயிற்சிக்கு மட்டும் செல்கின்றனர். நாங்கள் மாணவர்களை தயார் படுத்திக் கொண்டிருக்கிறோம். கல்வித்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக  பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 

பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவு இல்லை என்ற ஒரு கருத்து இருக்கிறது. அதனை ஆய்வு செய்து இன்று அந்த குழந்தைகளுக்காக சத்துணவை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். தன்னார்வ தொண்டர்களும் அதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். முதல் கட்டமாக ஈரோட்டில் 15 பள்ளிகளில் சத்தான உணவு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. படிப்படியாக செய்து வருகிறோம். உடனடியாக அனைத்தையும் நிறைவேற்ற முடியாது. 

புதிய கல்விக் கொள்கை பொறுத்தவரையில் மக்களுடைய கருத்தை கேட்டுக்கொண்டிருக்கிறோம். தமிழக அரசின் முழுமையான தெளிவான கொள்கை என்னவென்றால் இருமொழிக் கொள்கை மட்டும்தான். அதில் வேறு எந்த ஒரு மாற்றமும் இல்லை. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்” எனத் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close