[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

“4 நாட்களுக்கு மழை தொடரும்” - சென்னை வானிலை மையம்

chennai-met-said-rain-will-fall-next-four-days-in-tn

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. எனினும் மற்ற நேரங்களில் கடும் வெயில் மக்களை வாட்டுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான அளவிற்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதில் ஒருசில இடங்களில் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்மேற்கு மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு, குமரி கடல்பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close