[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

மது விற்பனைக்கு எதிராக கைதானவரை சொந்த ஜாமீனில் விடுவித்த நீதிபதி

judge-released-a-person-on-personal-bail

திருவாரூர் அருகே தேவர்கண்டநல்லூரில், மது விற்பனைக்கு எதிராக விளம்பர பதாகை வைத்ததாக கைது செய்யப்பட்ட இளைஞரை, தனது சொந்த ஜாமீனில் நீதிபதி விடுவித்தார்.

திருவாரூர் அருகே தேவர்கண்டநல்லூர் எனும் இடத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதை கண்டித்து இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் ‘தமிழ்நாடா குடிகார நாடா’ என்ற தலைப்பில் விளம்பர பதாகை வைத்தனர். இதன் காரணமாக விளம்பர பதாகை வைத்த செல்லப்பாண்டியன் என்ற இளைஞரை கொரடாச்சேரி காவல்துறையினர் கைது செய்து அவர் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அந்த இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தவர்களுக்கு எதிராக விளம்பர பதாகை வைத்தது தவறா எனக் காவல்துறையினரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் செல்லபாண்டியனை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து இளைஞரை தனது சொந்த ஜாமீனில் நீதிபதி விடுதலை செய்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close