[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

காணாமல் போன முகிலனை திருப்பதியில் பார்த்தேன் - நண்பர் தகவல்

mukilan-in-trupathi-his-friend-inform

காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை திருப்பதியில் பார்த்ததாக அவரது நண்பர் தகவல் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆவண படத்தை வெளியிட்ட சுற்றுசுழல் ஆர்வலர் முகிலன், கடந்த பிப்ரவரி மாதம் காணாமல் போனார். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் காணாமல் போன அவரை கண்டுபிடித்து தர கோரி ஹென்றி திபேன் என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த ஜூன் 6ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முகிலன் மாயமானது தொடர்பான வழக்கில் முக்கிய துப்பு கிடைத்துள்ளதாக, சிபிசிஐடி தரப்பில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை திருப்பதியில் பார்த்ததாக அவரது நண்பர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது நண்பர் சண்முகம் புதிய தலைமுறையிடம் கூறுகையில், “ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பதிக்கு ரயிலில் சென்றேன். அப்போது திருப்பதியில் முகிலனை பார்த்தேன். அவர் கோஷமிட்டு கொண்டே ஆந்திரா போலீசாருடன் சென்று கொண்டிருந்தார்.

வெள்ளை கலர் சட்டை அணிந்திருந்தார். இதுகுறித்து அவரது மனைவியிடம் தெரிவித்தேன். அவர் ஒரு புகைப்படம் எடுத்திருக்கலாம் என கேட்டார். ஆனால் ரயில் புறப்பட்டதால் எடுக்கமுடியவில்லை என தெரிவித்தேன். ஆந்திர போலீசாரின் பிடியில் முகிலன் இருக்கிறார் என திட்டமிட்டமாக தெரிகிறது” என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close