[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் - முதல்வர் பழனிசாமி பாராட்டு

tamil-nadu-cm-palanisamy-welcomed-union-budget

அனைத்து துறைகளிலும் நாடு மேலும் வளர்ச்சி பெற உகந்த தொலைநோக்கு பார்வை கொண்டது பட்ஜெட் என்று தமிழக முதல்வர் பழனிசாமி பழனிசாமி பாராட்டியுள்ளார்.

மத்திய பட்ஜெட் 2019ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதில், ஒரே நாடு ஒரே மின்சார தொகுப்பு திட்டம், ரயில்வே துரையில் தனியார் பங்களிப்பு, 2024 ஒவ்வொரு வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்க ‘ஹர் கர் ஜல்’ என்ற திட்டம், காந்தியக் கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க காந்தி பீடியா திட்டம், பான் எண் குறிப்பிட வேண்டிய அனைத்து இடங்களிலும் ஆதார் எண்ணை குறிப்பிடலாம், இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்படும், 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கு முழு வரி சலுகை அளிக்கப்பட்டுள்ளதால் வருமான வரி செலுத்த தேவையில்லை, எனினும் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். 

இந்நிலையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து துறைகளிலும் நாடு மேலும் வளர்ச்சி பெற உகந்த தொலைநோக்கு பார்வை கொண்டது பட்ஜெட். முன்னேற்றத்திற்கான கொள்கைகள், திட்டங்களோடு தாக்கல் செய்த பட்ஜெட்டை வரவேற்கிறேன். பிசிராந்தையார் பாடிய புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி தமிழுக்கு பெருமை சேர்த்தமைக்கு நன்றி. 

பல்வேறு வேளாண் திட்டங்களுக்கு கனிசமான நிதி ஒதுக்க வேண்டும்; சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது கட்டடப் பணிகளுக்கான ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும். கோவை, மதுரை மாநகராட்சியில் புதிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். பட்ஜெட்டில் அறிவித்துள்ள பல்வேறு நீர்வள மேம்பாட்டுத் திட்டங்கள் பெரும் பயனளிக்கும். கோதாவரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நடப்புக் கூட்டத் தொடரிலேயே நிதி ஒதுக்க கோரிக்கை” என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close