[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS கும்பகோணத்தில்‌ பாதாளச்சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தால் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

நீட் விலக்கு குறித்து அரசியல் கட்சிகள் வெறும் வாக்குறுதிகளை வழங்காதீர்கள் - சென்னை உயர்நீதிமன்றம்

chennai-high-court-advises-to-government-on-neet-issue

நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தருவோம் என வெறும் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி கொண்டிருக்காதீர்கள் என அரசியல் கட்சிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்த நிலையில், வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் தமிழக அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத் தருவோம் என ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சிகளோ வாக்குறுதிகளை மட்டுமே அளித்துக் கொண்டிருக்க வேண்டாம் நீதிபதி கிருபாகரன் கூறினார். 

நீட் தேர்லிவிலிருந்து விலக்கு பெறுவதில் தீர்க்கமாக இருந்தால், அதற்கான உரிய முயற்சிகளை அரசியல் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். கல்வித்துறையில் முன்னேறாத பிற மாநிலங்கள் நீட் தேர்வை ஏற்றுக்கொண்ட நிலையில், கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகம் எதிர்ப்பதாக கூறிய நீதிபதி, 9 மற்றும் 11-ம் வகுப்பு பாடங்களை நடத்தாமல், நேரடியாக 10 மற்றும் 12-ம் வகுப்பு பாடங்கள் நடத்துப்படுவதுதான் நீட் தேர்வை எதிர்கொள்வதில் மாணவர்களுக்கு மிகப்பெரும் சிக்கலாக இருப்பதாக வேதனை தெரிவித்தார். 

அரசு நடத்தும் நீட் பயிற்சி வகுப்புகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய, அரசுக்கு இரண்டு வார காலம் அவகாசம் வழங்கிய நீதிபதி கிருபாகரன், அனிதா குடும்பத்திற்கு வழங்கப்பட்டது போல, பிற மாணவிகளின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க முடியுமா என்பது குறித்தும் விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close