[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

முன்னாள் தமிழக டிஜிபி வி.ஆர் லட்சுமி நாராயணன் மறைவு 

former-tamil-nadu-dgp-v-r-lakshminarayanan-passes-away

இந்திரா காந்தியை கைது செய்த முன்னாள் சிபிஐ அதிகாரி வி.ஆர். லட்சுமி நாராயணன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 91.

இவர் புகழ்பெற்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயரின் சகோதரர் ஆவார். 1951 ஆம் ஆண்டு மதுரையில் உதவி காவல் கண்காணிப்பாளராக முதன் முதலில் தனது பணியில் இணைந்தார். மொரார்ஜி தேசாய் ஆட்சியின்போது லட்சுமி நாராயணன் சிபிஐயில் பணியாற்றினார். அப்போது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சிபிஐ அதிகாரி என்ற முறையில் கைது செய்தார். அப்போது இது பெரும் சர்ச்சையானது. 

இதையடுத்து காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்த போது லட்சுமி நாராயணன் சிபிஐயில் இருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் தமிழக காவல்துறைக்கு மாற்றப்பட்டார். பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த அவர், தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்து 1985 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். தனது பணிக்காலத்தில் பெரியார், ராஜாஜி, இந்திராகாந்தி, மோரார்ஜி தேசாய், காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோர்களுடன் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

ஓய்வுக்கு பின்னர் சென்னையில் வசித்து வந்த லட்சுமி நாராயணன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close