[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

தகாத உறவு காரணமாக தமிழகத்தில் 1459 கொலைகள் - காவல்துறை அறிக்கை

1459-murders-in-tamil-nadu-due-to-illicit-relationship

தமிழகத்தில் தகாத உறவு காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் 1459 கொலைகள் நடைபெற்றுள்ளதாக தமிழக காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தகாத உறவு தகராறில் ரஞ்சித் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பான வழக்கில் அஜித்குமார் என்பவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் 10 ஆண்டுகளில் தகாத உறவு காரணமாக தமிழகத்தில் நடந்த  கொலைகள் தொடர்பாக மாவட்ட அளவில் குடும்ப ஆலோசனை குழுகளை உருவாக்குவது உள்ளிட்ட 20 கேள்விகளை மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக காவல் துறையின் சார்பில் 20 கேள்விகளில் 2 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. அதில், தகாத உறவு காரணமாக சென்னையில் கடந்த பத்து ஆண்டுகளில் 158 கொலைகளும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 1301 கொலைகளும் நடந்துள்ளதாக கூறபட்டுள்ளது.

இதே போல தகாத உறவு காரணமாக கடத்தல், மிரட்டல், தாக்குதல் உட்பட 213 குற்றங்கள் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்றுள்ளதாகவும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 621 குற்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அனைத்து கேள்விகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜூலை 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

மேலும் சமீப காலமாக தகாத உறவு காரணமாக பெற்ற தாயே குழந்தையை கொலை செய்யும் அதிர்ச்சிக்கரமான சம்பவங்கள்  நடைபெறுவதற்கு வேதனை தெரிவித்த நீதிபதிகள், இது திருமணம், குடும்பம் என்ற கட்டமைப்பை பாதிக்கும் சமூக பிரச்சினையாக உருவெடுத்து வருவதாக எச்சரித்தனர்.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டறிந்து அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் எனவும் செல் போனில் ஆபாச படங்களை எளிதாக பார்க்க முடிவதால் தான் இது போன்ற பாலியல் குற்றங்கள் அதிகரிக்கிறதா? என்பதையும் விசாரிக்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு  நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close