[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

இன்றைய முக்கியச் செய்திகள் சில..!

today-some-top-news

பள்ளிகளில் மாணவர்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். குடிநீர் இல்லாத பள்ளிகள் குறித்து தெரியவந்தால், 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், அவர் உறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வார 499 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை புனரமைக்க குடிமராமத்து பணிகளுக்காக இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. 

கொல்கத்தாவில் அரசு பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் வரும் 17ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ கு.ராதாமணி உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 67. மறைந்த எம்எல்ஏவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'ராதாமணியின் மரணம் கட்சிக்கு பேரிழப்பு' என வேதனை தெரிவித்தார்.

கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்பட்டால், இந்தியாவின் பாதி பகுதி நாசமாகிவிடும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டி உள்ளார்.

தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, தகவல் தொடர்பு மொழியாக தமிழை பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவை தெற்கு ரயில்வே நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது.

எழுத்தாளர் சபரிநாதனுக்கு சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் வால் என்ற கவிதை தொகுப்புக்காக சபரிநாதன் யுவ புரஸ்கார் விருதைப் பெறுகிறார். இதேபோல், குழந்தைகள் இலக்கிய பங்களிப்புக்காக எழுத்தாளர் தேவி நாச்சியப்பனுக்கு சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close