[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

ஊடகங்களில் கருத்து தெரிவிக்க அதிமுகவினருக்கு தடை!

aiadmk-ban-their-spokes-persons-to-talk-media

அடுத்த அறிவிப்பு வரும் வரை எந்த ஊடகத்திலும் பத்திரிகையிலும் அதிமுக செய்தி தொடர்பாளர்கள் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று அதிமுக கூறியுள்ளது.

அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. ஒற்றைத் தலைமை தேவை என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில் நடக்கும் கூட்டம் என்பதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், பரபரப்பின்றி கூட்டம் முடிந்தது. இதில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அதிமுக தலைமைக்கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஊடகத்திலும் பத்திரிகையிலும் அதிமுகவினர் கருத்து தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுக செய்தி தொடர்பாளர்கள் எந்த ஒரு விவகாரத்திலும் கழகத்தின் நிலைப்பாடு என்ன என்பதை, கழக நிர்வாகிகள் ஒப்புதலை பெற்ற கருத்துகளை மட்டுமே தெரிவிப்பதற்கு உரிமை பெற்றவர்கள். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்து அடுத்த கட்ட அரசியல் பணிகள் தொடங்கியுள்ள வேளையில், செய்தி தொடர்பாளர்கள் தலைமைக் கழகத்தில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும்வரை எந்த ஊடகத்திலும் பத்திரிகையிலும் சமூகத் தொடர்பு சாதனங்களிலும் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம். 


மற்றவர்கள் யாரும் தங்கள் கருத்துக்களை கழகத்தின் கருத்துக்களாக, பத்திரிகை, ஊடகங்களில் தெரிவிக்கக் கூடாது. அத்தகைய நடவடிக்கை யில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கழகத்தின் சார்பிலோ அல்லது கழக ஆதரவாளர்கள் என்ற பெயரிலோ தனி நபர்களை அழைத்து அதிமுக பிரதிநிதிகள் போல சித்தரித்து, அவர்கள் கழகத்தின் சார்பில் கருத்துக்களை வெளியிடுவதை ஊடக மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டாம்’’.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close