[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

கீழடியில் 5-ஆம் கட்ட அகழாய்வு ஜூன் 12-ல் தொடக்கம்

5th-phase-inspection-begins-at-keeladi-on-june-12

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5-ஆம் கட்ட அகழாய்வு புதன்கிழமை தொடங்க உள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

திருப்புவனம் அருகே கீழடி கிராமம் பண்டைய தமிழர்களின் வசிப்பிடமாக கண்டறியப்பட்டு 2013-ஆம் ஆண்டு முதல் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இரண்டு கட்ட ஆய்வுகளுக்குப்பின் அதனை நடத்தி வந்த தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டார். இதனையடுத்து மூன்றாம் கட்ட அகழாய்வை தொல்லியல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் மேற்கொண்டார்.

மூன்று கட்டங்களுடன் மத்திய தொல்லியல்துறை தனது ஆய்வை முடித்துக் கொண்டது. கீழடியில் ஆய்வு தொடர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியதால் 4ஆம் கட்ட அகழாய்வை தமிழக அரசே மேற்கொண்டது. கீழடியில் இதுவரை 14 ஆயிரத்து 500 அரும்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பாதுகாக்க அகழ் வைப்பகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close