[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

கச்சத் தீவு மீட்பு முதல் ஜல்லிக்கட்டு தடை நீக்கம் வரை: பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்திய கோரிக்கைகள்

tamil-nadu-cm-jayalalithaa-meets-prime-minister-narendra-mod

பிரதமர் மோடியை, அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா சந்தித்து, 29 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அவரது கோரிக்கை மனுவில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும், இலங்கை சிறையில் வாடும் 21 மீனவர்களையும் 92 படகுகளுடன் விடுவிக்க நடவடிக்கை, மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வெண்டும், அத்திக் கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்ற நிதி ஒதுக்க வேண்டும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும், இலங்கை வசம் உள்ள கச்சத் தீவை மீட்க வேண்டும், தமிழகத்துக்கு மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்தத் நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, காவிரியின் குறுக்கே 2 தடுப்பணைகள் கட்டும் கர்நாடகாவின் முயற்சியைத் தடுக்க வேண்டும், சென்னை மெட்ரொ ரயில் தொடர்பான திட்டங்களுக்கு நிதி அளிக்க வேண்டும், ஜிஎஸ்டி மசோதாவில் மாநில அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், பறக்கும் ரயிலையும் - மெட்ரோ ரயிலையும் இணைக்க வேண்டும், நதிநீர் இணைப்புக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close