[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

சிறுமியை வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 70 வயது முதியவர் கைது

9th-std-student-girl-harassed-by-70-year-old-man-in-virudhunagar

விருதுநகரில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பாக்கிய தாத்தா முறை உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள தர்மம் கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு தாய், தந்தை இல்லாததால் தன் அத்தையின் பராமரிப்பில் இருந்து வருகிறார். 

பள்ளிக்கு விடுமுறை நாட்களில் அதே ஊரை சேர்ந்த தாத்தா உறவான கருப்பையா (வயது 70) என்ற முதியவர் வீட்டிற்கு டிவி பார்க்க செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு திடீரென உடற்சோர்வு, வயிற்றுவலி  ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியை அவரது அத்தை சோதித்து பார்த்துள்ளார். அப்போது சிறுமியின் வயிறு பெரிதாகி இருப்பதை கண்டு சந்தேகமடைந்துள்ளார். 

இது குறித்து சிறுமியிடம் அவரது அத்தை விசாரித்தபோது, டிவி பார்க்க செல்லும் போது கருப்பையா தாத்தா தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து கூறியுள்ளார். மேலும் 5 மாத காலமாக சிறுமியிடம் கருப்பையா பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்த தகவல் ஊர் மக்களுக்கு தெரியவரவே கட்டனூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டது. 

இதையடுத்து கட்டனூர் காவல்துறையினர் முதியவர் கருப்பையாவை கைது செய்தனர். பின்னர் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்ற மகளிர் போலீசார், அவர் 5 மாத கர்ப்பிணி என்பதை உறுதி செய்தனர். சிறுமியிடம் வாக்குமூலம் வாங்கிய பின்னர் கருப்பையாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close