[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

மனைவி பிரிவை தாங்காமல் மின்சாரம் பாய்ச்சி கணவர் தற்கொலை 

the-husband-committed-suicide-by-throwing-electricity-in-chennai

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தன் உடம்பில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கோபால், சென்னை மணலி திருவிக நகர் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வந்தார். கட்டிட வேலை செய்யும் கோபால், குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தினமும் மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவி கணவனை பிரிந்து தனியாக சென்றுவிட்டார். 

Related image

இந்நிலையில் கட்டிட வேலை வேலை செய்யும் கோபால், இரண்டு நாட்களாக வேலைக்கு போகததால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் வீட்டிற்குச் சென்று பார்த்த போது, துர்நாற்றம் வீசியுள்ளது. மேலும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் உடனடியாக காவல்துறையினருக்கு வீட்டின் உரிமையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணலி போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, கோபால் படுத்த நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது வயிற்றின் இடுப்பு பகுதியில் மின் வயர் வயிற்றில் கட்டி மின்சாரம் பாய்ச்சி, அதில் சுவிட்ச் ஆன் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. மேலும், அருகில் விஷ பாட்டில் ஒன்றும் இருந்தது. 

Image result for மனைவியை பிரிந்த கணவன்

இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார், சென்னை அரசு  ஸ்டேன்லி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மணலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close