[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது

the-man-arrested-for-kidnapping-a-girl-and-married-in-chennai

சென்னையைச் சேர்ந்த சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த ஆந்திர வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை புளியந்தோப்பை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர், தனது 14 வயது மகளை காணவில்லை என்று கடந்த 8-ஆம் தேதி புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த புளியந்தோப்பு போலீசார் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர்.

Image result for சிறுமி  திருமணம்

இந்நிலையில், சிறுமியை திருப்பதியில் இருந்து வந்த வாலிபர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி பேருந்து மூலம் கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. மேலும் போலீசார் தங்களை பிடித்துவிடுவார்கள் என்று எண்ணிய வாலிபர், திருமணம் செய்த சிறுமியை சென்னை வந்து அவரது வீட்டில் விட்டு விட்டு ரயில் மூலம் திருப்பதிக்கு தப்பி செல்ல முயன்றுள்ளார்.

Image result for சிறுமியை கடத்திச் சென்று திருமணம்

அப்போது தகவலறிந்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்துறை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்த அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர், காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் பெயர் பாலகிருஷ்ணன்(21) என்பதும் துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார் எனபதும் தெரிய வந்தது. 

Image result for சிறுமியை கடத்திச் சென்று திருமணம்

மேலும் திருப்பதியில் இவரது வீட்டிற்கு அருகே உள்ள உறவுக்காரர்கள் வீட்டிற்கு இந்த சிறுமி வரும் போது பழக்கம் ஏற்பட்டதாகவும், சிறுமி மீது இருந்த ஆசையால் அவருக்கு ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி வீட்டை விட்டு வெளியே வர சொல்லி திருப்பதிக்கு அழைத்து சென்று அங்கு திருமணம் செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து பாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்த புளியந்தோப்பு காவல்துறையினர், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close