[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது - தப்புமா தமிழ்நாடு?

new-cyclone-at-bay-of-bengal

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைப்பெற்றிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை அதன்பின் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் தற்போது புயலமாக மாறியுள்ளது. அந்தப் புயலுக்கு ஏற்கெனவே ஃபானி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி ஃபானி புயல் நேரடியாக தமிழக கரையைக் கடக்க வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதனால்  புயல் குறித்து தமிழக மக்கள் அச்சப்பட தேவையில்லை. அதேசமயம் இந்தப் புயலால் மழை வருமா..? வராதா என்பது புயல் நகர்வை பொருத்தே தெரியவரும் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் இதுகுறித்து கூறும்போது, புயல் ஒருவேளை தமிழகத்தை நெருங்கி வந்தால் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் புயல் விலகி சென்றுவிட்டால் நிலப்பரப்பின் ஈரப்பதம் வெகுவாக குறைந்து தமிழகத்தில் கடுமையான அனல் காற்று வீசும் எனக் கூறியுள்ளார். இருப்பினும் அந்த நிலவரம் புயல் நகர்வை பொருத்து நாளையே தெரியவரும் எனக் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close