[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

கண்ணில் கண்டவர்களை எல்லாம் வெறிகொண்டு கடித்தது நாய் :  ஒரே நாளில் 50 பேர் காயம்  ! 

a-dog-broke-over-50-people-in-a-single-day-in-salem

சேலத்தில் வெறிபிடித்த நாய் ஒன்று ஒரே நாளில் 50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாநகரில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றி திரிவதாகவும், இதனால் பொது மக்கள் குறிப்பாக குழந்தைகள் பெருமளவில் பாதிக்கபட்டு வருவதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க பல்வேறு சமூக அமைப்பின் சார்பிலும் பொது மக்களின் சார்பில் சேலம் மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து மாநகராட்சி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

Image result for தெரு நாய்கள்

(File Photo)

இந்த நிலையில் சேலம் களரம்பட்டி, கிச்சிப்பாளையம், பச்சபட்டி உள்ளிட்ட பகுதியில் இன்று காலை நாய் கடித்ததில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். குறிப்பிட்ட பகுதியில் வெறி கொண்ட நாய் ஓன்று சாலையில் நடந்து சென்றவர்கள், கடையில் நின்று கொண்டிருந்தவர்கள், வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தவர்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோரை கடித்து குதறியது. இதில் காலில் பலத்த காயமடைந்து ரத்தம் சொட்ட சொட்ட, சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பலர் வந்தனர். பாதிக்கப்பட்ட அனைவரும் ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு வந்த்தால் சிகிச்சை அளிப்பதில் சிரமமும் தாமதமும் ஏற்பட்டது. அதிக அளவு காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் சேலம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.

இதனையடுத்து குடியிருப்புகளுக்கு அருகேயுள்ள குப்பைக் கிடங்குக்குள் தப்பியோடிய அந்த வெறிநாயை, விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close