[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.
  • BREAKING-NEWS தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் ரோகித் சர்மா அசத்தல் சதம். போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே முடிவுக்கு வந்தது முதல்நாள் ஆட்டம்
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் பரப்புரை ஓய்ந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

வாக்களித்து ஓட்டலுக்கு போனால் பில்களில் 10 சதவிதம் தள்ளுபடி

tn-restaurants-provide-10-discount-bill-those-who-vote


நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தால் ஓட்டல் பில்களில் 10% தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் வரும் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மக்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல ஆயத்தங்கள் எடுத்து வருகிறது. குறிப்பாக வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு பாடல் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் ஆகியவற்றை நடத்திவருகிறது. 

இந்நிலையில் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கமும் தன் பங்கிற்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் வரும் 18ஆம் தேதி தேர்தலில் வாக்களிப்பவர்கள் ஓட்டல் பில்களில் 10% தள்ளுபடி பெற்றுகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. இந்த தள்ளுபடியை மக்கள் தங்களில் கை விரலில் உள்ள மை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி சலுகை சரவணபவன், சங்கீதா, ஹாட் சிப்ஸ், வசந்த பவன் உள்ளிட்ட முன்னனி ஓட்டல்களிலும் செல்லும். மேலும் இந்தத் தள்ளுபடி சலுகையை மக்கள் மாலை 6 மணிக்கு பிறகு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நியூஸ் மினிட் தளத்திற்கு தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீனிவாசன் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், “இந்த தள்ளுபடி முடிவு மக்கள் அதிகளவில் வாக்களிக்க ஏதுவாக இருக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இது நாட்டிற்கு நாங்கள் செய்யும் சிறிய பங்களிப்பு. இந்தத் தள்ளுபடியை மக்கள் வாக்குப்பதிவு முடிந்த பிறகு பெறலாம். அதாவது மாலை 6 மணிக்கு பிறகு ஓட்டல்களுக்கு சென்று தள்ளுபடியை பெற்றுகொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close