[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார் - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை - அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு
  • BREAKING-NEWS வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது - கிழக்கு இந்திய பெருங்கடல்- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் 66 பேர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.34 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலையில் மாற்றமின்றி, டீசல் விலை 8 காசுகள் அதிகரித்து விற்பனை
  • BREAKING-NEWS சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை- பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளும் தீவிர சோதனை

பெண்ணை கன்னத்தில் அறைந்த காவல் அதிகாரி

tamil-nadu-police-slapping-woman-who-went-to-the-vehicle-in-theni

தேனியில் முதல்வர் பிரசார கூட்டத்தில் வாகனத்தில் சென்ற பெண்ணை, தேனி காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகேசன் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மக்களவைத் தொகுதி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து, தேனி நேரு சிலை அருகே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி   பரப்புரை மேற்கொண்டார். இதனால் நேரு சிலை அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. நேரு சிலை முன்பு பலத்த கூட்டம் நிலவிதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தது. வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியது.

இந்த நிலையில் பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த டாடா மேஜிக் வாகனம் நெருக்கடியில் சிக்கியது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகேசன், வாகனத்தை வேகமாக இயக்குமாறு ஓட்டுநர் ஒருவரை கேட்டுக் கொண்டார். அந்த வாகனத்தில் இருந்த பெண் ஒருவர், முருகேசனை நோக்கி கையெடுத்து கும்பிட்டார். அப்போது அந்த பெண்ணின் கன்னத்தில் அவர் வேகமாக அறைந்தார். இதனால் அந்த பெண் நிலைகுலைந்தார்.  வாகனத்தில் சென்றபோது பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை கையெடுத்துக் கும்பிட்ட பெண்ணை காவலர் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related image

மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நடந்த மறியலில் போராட்டத்தில், அப்போதைய திருப்பூர் கூடுதல் எஸ்.பி. பாண்டியராஜன் இது போல பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close