[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்கு தேர்தல் வைப்பு தொகை வழங்கிய எழுத்தாளர்கள்

the-writers-have-allotted-the-election-deposit-to-ravikumar-contesting-in-dmk-alliance-at-villupuram

விழுப்புரத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தை கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமாருக்கு எழுத்தாளர்கள் அனைவரும் இணைந்து தேர்தல் வைப்பு தொகை வழங்கியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்புகளான பாரதி செம்புலம்,மருதம்,தென்பெண்ணை,பாவேந்தர் பேரவை, உலகத் தமிழ் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் எழுத்தாளர்கள் இணைந்து, விழுப்புரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தை கட்சியின் பொதுச்செயலாளரும்,எழுத்தாளருமான ரவிக்குமாரின் தேர்தல் வைப்பு நிதிக்கான ரூபாய் 12,500 வழங்கினர்.

Image result for VCK party general secretary Ravikumar

அப்போது பேசிய ரவிக்குமார் இந்தப் பகுதியில் எழுத்தாளர்கள், தமிழ் அமைப்பினர்கள் என் மீது வைத்திருக்கும் பற்றின் காரணமாக என் தேர்தல் வைப்பு நிதிக்கான தொகையை கொடுத்திருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்று கூறினார். 

இதனைத்தொடர்ந்து பேசிய பாரதி செம்புலம் அமைப்பின் தலைவர் ராமமூர்த்தி, எழுத்துலகில் தொடர்ந்து பல்வேறு தளங்களில் இயங்கி வந்த ரவிக்குமார், தமிழ் மொழி மற்றும் மனித உரிமைகள் எனப் பல தளங்களில் தொண்டாற்றி இருக்கிறார். ஒரு எழுத்தாளராக பாராளுமன்றத்திற்குச் சென்று இதற்காக வெகு மக்களின் பிரச்னைகளை அவர் பேச வேண்டும் என்கிற நோக்கத்துடன் நாங்கள் இந்த நிதியை திரட்டி கொடுத்திருக்கிறோம் என்றார். தமிழகத்தில் தற்போது நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் இதுபோன்று பணம் திரட்டி கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதியிலிருந்து விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பில் போட்டியிடும் ரவிக்குமாருக்கு மொத்தம் சுமார் 9 லட்சத்து 34 ஆயிரத்து 953 ரூபாய் மதிப்பி‌ல் அசையும் சொத்துகளும், 42 லட்சத்து 40  ஆயிரம் ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகளும், வங்கியில் 13 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் கடனும் இருப்பதாகவும், தனது மனைவிக்கு 13 லட்சத்து 34 ஆயிரத்து 907 ரூபாய் மதிப்பி‌ல் அசையும் சொத்துகள் இருப்பதாகவும்  அவர் தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close