[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுக கூடுதல் தேர்தல் அறிக்கை - உடனடி நதிகள் இணைப்பு திட்டம்

admk-2nd-election-statement-released

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூடுதல் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை அதிமுக வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக ஏற்கனவே தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது கூடுதல் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஈழத் த‌மிழினப் படுகொ‌லைக்கு அன்றைய திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியாளர்கள் காரணம் என்றும், அவர்கள் மீது ஐநா சபையும், சர்வதேச நாடுகளும், இந்திய அரசாங்கமும் உரிய சட்ட நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க ‌அதிமுக வலியுறுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஈழத்தமிழரின் கோரிக்கைகள் குறித்து வாக்கெடுப்பு நடத்த, இந்திய அரசையும், ஐக்கிய நாடுகள் அமைப்பையும், ஏனைய பன்னாட்டு அமைப்புகளையும் அதிமுக வலியுறுத்தும் என அறிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏழு தமிழர்களை விடுவிப்பதற்கு மத்திய அரசிடமும், குடியரசுத் தலைவ‌ரிடமும் வலியுறுத்தப்படும் என அதிமுக தெரிவித்துள்ளது. காவிரி - கோதாவரி நதிகள் இணைப்புத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் கூடுதல் தேர்தல் அறிக்கையில் அதிமுக உறுதி அளித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close