[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரள அரசு வழங்கும் நீரை தமிழக அரசு ஏற்க மறுத்ததாக வந்த தகவலில் உண்மையில்லை - அமைச்சர் வேலுமணி
  • BREAKING-NEWS தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மாமூல் வசூல், லஞ்சம் வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்துறை செயலர், டிஜிபி 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
  • BREAKING-NEWS வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

"தமிழகத்தில் இனிமேல் மதுபான உற்பத்தி ஆலைக்கு அனுமதி இல்லை"டிடிவி தினகரனின் தேர்தல் அறிக்கை

ammk-manifesto-for-lok-sabha-election-2019

தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி திமுக, அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அமமுக துணை பொதுச்செயளாலர் டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.  அமமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ள.

* கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றம் செய்யப்படும். அதற்கு அமமுக பாடுபடும்; அப்படி மாற்றுவதால் மத்திய அரசால் கிடைக்கக்கூடிய நிதி உதவிகள்   தடைபடாமல் பார்த்துக்கொள்ளவும் கவனம் செலுத்துவோம்.

* தமிழகத்தை 6 மண்டலமாக பிரித்து தொழில் பூங்கா உருவாக்கப்படும்

* நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வலியுறுத்தப்படும்.

* விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும், தொழிற்சாலையையும் டெல்டா மாவட்டங்களில் அமைக்க நிரந்தர தடை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

* 60 வயது முதிர்ந்த ஆண், பெண், விவசாய தொழிலாளர்கள், நெசவாளர்களுக்கு மாதம் ரூ. 4000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்.

* முதியோருக்கான மாத உதவித்தொகை ரூ.1000த்திலிருந்து ரூ.2000ஆக உயர்த்தப்படும்.

* தமிழகத்தில் இனிமேல் மதுபான உற்பத்தி ஆலைக்கு அனுமதி இல்லை, கொள்கை முடிவு எடுக்கப்படும்

* 7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

* மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்; நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

* பொறியியல் பட்டதாரிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்; மாணவர்கள் நல ஆணையம் அமைக்கப்படம்

* பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க, கண்காணிக்க தனி ஆணையம் ஏற்படுத்தப்படும்.

* வெளிநாடு தமிழர்கள் பிரச்சனையை தீர்க்க தனி வாரியம் சென்னையில் செயல்படுத்தப்படும்.

* 6 முதல் முதுகலை பட்டம் வரை படிக்கும் மாணவர்களுக்கு சானிடரி நாப்கின் வழங்கப்படும்.

* 385 ஊராட்சிகளில் அம்மா கிராமப்புர வங்கி

* காவலர்கள் தற்கொலை தடுக்க மாவட்ட வாரியாக உளவியல் நிபுணர்களை கொண்டு தனி குழு அமைக்கப்படும்.

* கச்சதீவு திரும்ப பெற அமமுக பாடுபடும்.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close