[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

“ராஜபாளையம் பேராசிரியர் மனைவி கொலைக்கு தகாத உறவே காரணம்” - குற்றவாளி வாக்குமூலம் 

the-guilty-statement-says-illegal-relationship-is-the-reason-for-murder

ராஜபாளையம் கல்லூரி பேராசிரியர் மனைவி கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் கொடுத்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையம் தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் வைரவன்-அனிதா தம்பதியினர். வைரவன் நெல்லை மாவட்டம் சுரண்டை பகுதியிலுள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அனிதா தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவரது வீட்டில் மர்மமான முறையில் அனிதா அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார். இந்தக் கொலை குறித்து ராஜபாளையம் வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த 8-க்கும் மேற்ப்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை செய்தனர். அதில் அனிதாவின் தோழியான மகாலட்சுமியின் மகன் வெங்கடேஷ் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தில், அவர் அனிதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும் கொலைக்கான காரணம் குறித்து வெங்கடேஷ் போலீசாரிடம் விளக்கியுள்ளார். அனிதாவும் தனது தாயும் சில தவறான பழக்கங்களில் ஈடுபட்டு வந்ததாகவும், அதை பயன்படுத்தி அனிதாவிடம் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில் அனிதா மற்றொரு நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது வெங்கடேஷூக்கு தெரியவந்தது. அதைத் தட்டிக் கேட்ட வெங்கடேஷ், அதை தனது நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தத் தகவல் அனிதாவிற்கு தெரியவர, வெங்கடேஷை தொலைபேசி மூலம் வீட்டிற்குச் அழைத்துள்ளார். ஆகவே வெங்கடேஷ் அனிதா வீட்டிற்கு சென்றுள்ளார்.

Image result for கள்ளத்தொடர்பு

அப்போது அனிதா, என்னைப் பற்றி ஏன் வெளியில் தவறாகப் பேசி வருகிறாய் என்றும் இப்படி பேசினால் உன் அம்மாவிடம் கூறுவேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் உனது அம்மாவும்தான் தவறாக நடந்து வருகிறார் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், வீட்டில் கிடந்த குக்கர் மூடியை எடுத்து அடித்ததில் அனிதா, ரத்த வெள்ளத்தில் பலத்த காயங்களுடன் அதே இடத்தில் உயிரழந்தார் என போலீசாரிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் கொலைக் குற்றவாளி வெங்கடேஷை ராஜபாளையம் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close