[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னையில் ஆந்திர தொழிலதிபர் வீட்டில் மேலும் 7 சிலைகள் பறிமுதல்

seven-more-statues-captured-from-chennai-business-man-s-house

சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆந்திர தொழிலதிபர் வீட்டில் 3வது நாளாக நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 7 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் வீட்டிலுள்ள 4 அறைகள் உடைக்கப்பட்டு கோடிக்கணக்கான மதிப்புள்ள 3 ஐம்பொன் சிலைகள் உட்பட 7 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

யானை தந்தத்தால் ஆன சிலைகள், பழங்கால ஓவியங்கள், கற்சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிலைகளின் பாரம்பரியத்தை அறிய டெல்லியிலிருந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வரவுள்ளனர். சிலைகள் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

காவல்துறையில் சரணடைய தீனதயாளனுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டிற்கு தப்பி செல்லாமல் இருக்க அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாது ஹாலந்திலும் அவர் வங்கிக் கணக்குகள் வைத்திருப்பதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ள‌னர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close