[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

சென்னை விமான நிலையத்துக்கு ரெட் அலர்ட் !

red-alert-to-chennai-airport

பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டதோடு பாதுகாப்பு பலப்படுத்‌தப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படையினர் பதிலடி கொடுத்திருந்தனர். அப்போது இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் விமானத்தை விரட்டிச் சென்றபோது, விமானம் தாக்கப்பட்டதில், விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் விழுந்தார். அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்துச் சென்றனர். பின்னர் நல்லெண்ண அடிப்படையில் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இருப்பினும் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.

இதனிடையே பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது. உளவுத்துறையின் ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் வழக்கத்தை விட அதிக போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்படுகிறது. பயணிகளின் உடைமைகள் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அத்துடன் விமான நிலையத்திற்கு வரும் அனைத்து கார்களிலும் சோதனை நடத்தப்படுகிறது. மறுஅறிவிப்பு வரும் வரை பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close