[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

கூட்டமான பகுதியில் தற்கொலைக்கு முயன்ற நபர் - தேனியில் பரபரப்பு

a-person-try-to-attempt-suicide-in-theni

தேனியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே சுப்பன் தெரு பகுதி உள்ளது. இது ஆட்கள் அதிகம் நடமாடும் பகுதியாகும். இந்த பகுதியில் தீடீரென ஒரு நபர், தனது இடுப்பில் மறைத்து வைத்து இருந்த கத்தியினை எடுத்து கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்றார். ரத்தம் சொட்ட கழுத்தை அறுப்பதை கண்ட அங்கிருந்த மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரது தற்கொலையை தடுக்க மக்கள் முயன்ற போது, அந்த நபர் கத்தியை காட்டி அவர்களை மிரட்டியதால் யாரும் அருகில் செல்ல முடியவில்லை.

இது குறித்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல் துறையினர், அந்த நபரை மீட்டு தேனி அரசு மருத்துவமனையில்  சிகிச்சை காக அனுமதித்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த நபரின் பெயர் செல்லபாண்டியன் என்றும், தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. மேலும், குடும்பப் பிரச்சனை காரணமாக அவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்றது விசாரணையில் வெளிவந்தது. மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close