[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS 8 நிமிட சண்டைக் காட்சிக்கு ரூ.70 கோடி: பிரபாஸின் ’சாஹோ’ தயாரிப்பாளர் தாராளம்
  • BREAKING-NEWS ஒருவரையொருவர் கன்னத்தில் அறைந்து கொள்ளும் விநோத போட்டி
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS “மாநிலங்களவைக்கு வைகோ செல்வது இந்து கலாச்சாரத்தை சீர்குலைக்கும்” - சுப்ரமணியன் சுவாமி

“கூட்டணி மட்டும் முக்கியமல்ல; நட்பும் முக்கியம்” - விஜயகாந்த் சந்திப்பு பற்றி பியூஷ்

alliance-not-only-important-friendship-also-important-piyush-goyal-said-about-vijayakanth

கூட்டணி தொடர்பாக பேசுவது மட்டும் முக்கியமல்ல, தனிப்பட்ட நட்பும் முக்கியமானது என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை சந்தித்த பின்னர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தமிழகத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தனது கூட்டணியை உறுதி செய்துள்ளது. சென்னை கிரவுன் பிளாசாவில் இன்று நடந்த அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில், பாமக பங்கேற்றது. சுமூகமாக நடந்த இந்தப் பேச்சு வார்த்தையின் முடிவில், பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அவை எந்தத் தொகுதிகள் என்பது அறிவிக்கப்படவில்லை. 

இதைத்தொடர்ந்து பாஜக-அதிமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. நீண்ட நேரம் நடந்த இப்பேச்சுவார்த்தையின் முடிவில், பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அத்துடன் வரும் 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக, பாமக ஆகிய இரண்டு கட்சிகளுமே அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனை துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் உறுதி செய்தனர். இந்தக் கூட்டணி குறித்து திமுக, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்த பியூஷ் கோயல் சென்னையிலுள்ள விஜயகாந்த் வீட்டிற்குச் சென்றார். அவருடன் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வானாதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் சென்றனர். விஜயகாந்துடன் தேமுதிக நிர்வாகிகள் பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகியோர் உடனிருந்தனர். பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் பேசிய பியூஷ் கோயல், “சிகிச்சைப்பிறகு விஜயகாந்த் உடல்நலம் தேறி வருகிறார். நீண்ட உடல் நலம், ஆயுளோடு அவர் இருக்க பிரார்த்திக்கின்றோம். விஜயகாந்த் எனது பழைய நண்பர். பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா சார்பில் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவருக்கு வாழ்த்துகளை கூறுமாறு மோடியும், அமித் ஷாவும் கூறினர். திரைத்துறைக்கு ஆதரவளிக்கும் மத்திய அரசு மற்றும் மோடியின் நடவடிக்கைகளை விஜயகாந்த் பாராட்டினார். கூட்டணி அரசியல் மட்டுமே முக்கியமல்ல. தனிப்பட்ட நட்பும் முக்கியம்” என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close