[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

கலைஞர் பெயரில் மீண்டும் விருதுகள் - அமைச்சர் க.பாண்டியராஜன்

again-award-in-the-name-of-kalignar-k-pandiyarajan

மத்திய செம்மொழி தழிழாய்வு நிறுவனத்தில் கலைஞர் பெயரிலான விருதினை மீண்டும் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் க.பாண்டியராஜன் பேரவையில் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சரியாக இயங்கவில்லை என்றும், கடந்த 10 ஆண்டுகளாக இயக்குநர் இன்றி இருப்பதாகவும் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசினார். மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதி குறைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஸ்டாலின், மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் முழுவீச்சில் இயங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் க.பாண்டியராஜன், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு ஒரு மாதத்திற்குள் இயக்குநர் நியமிக்கப்படுவார் என உறுதி அளித்தார். இந்த நிறுவனத்தில் கலைஞர் விருது வழங்கப்படவில்லை என்பது உண்மைதான் என்றும் கலைஞர் விருது நிறுத்தப்பட மத்திய அரசுதான் காரணம் என்றும் தெரிவித்தார். ஆனால் மீண்டும் விருதினை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும் அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார். பெரும்பாக்கத்தில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவன வளாகம் 3 மாதங்களில் செயல்பட தொடங்கும் என அவர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close